தினக்கூத்து
Tuesday, March 22, 2011
இன்று முதல் காலிறுதி போட்டிகள் .
இன்று முதல் உலக கோப்பை காலிறுதி போட்டிகள் துவங்குகிறது . இன்று நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் பாக்கிஸ்தான் அணியை மேற்கிந்திய தீவுகள் எதிர்கொள்கிறது .
இன்று முதல் பிரச்சாரம் ஆரம்பம் .
திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவரது பிரச்சாரத்தை துவங்குகிறார் . இக்கூட்டத்தில் தி.மு.க அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் பங்கேற்கின்றனர் . மேலும் அண்மையில் அறிவித்தபடி நடிகர் வடிவேலுவும் இந்த கூட்டத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் .
Friday, March 18, 2011
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் நேற்றைய முடிவுகளும் .
நேற்றைய முடிவுகள் :
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நேதேர்லாண்டை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது அயர்லாந்து... இலங்கையில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை 112 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .
இன்றைய போட்டி :
இன்று நடைபெறும் பி பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை தென்னாப்பரிக்க அணி எதிர்கொள்கிறது . இப்போட்டியில் வங்கதேசம் வென்றால் அது அப்பிரிவில் அழ குழபங்களை ஏற்படுத்தும் .
ஏ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பாக்கிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி .
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நேதேர்லாண்டை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது அயர்லாந்து... இலங்கையில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை 112 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .
இன்றைய போட்டி :
இன்று நடைபெறும் பி பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை தென்னாப்பரிக்க அணி எதிர்கொள்கிறது . இப்போட்டியில் வங்கதேசம் வென்றால் அது அப்பிரிவில் அழ குழபங்களை ஏற்படுத்தும் .
ஏ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பாக்கிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி .
புஸ்.. புஸ் ... என்று சீரிய ஊசிவெடிகள் ...
தமிழக அரசியலையே மாற்றக்கூடிய நாளாக கருதப்பட்டது நேற்றைய தினம் . ஆனால் அது ஏற்கனவே அமைந்த தேர்தல் கூட்டணியை கூட மாற்றவில்ல என்பதுதான் நகைப்புக்குரியது . நேற்று மூன்றாவதணியை பற்றி அறிவிப்பதாக கூறிய விஜயகாந்த் அவர் கட்சி அலுவகத்திற்கு வருவது குறித்தான அறிவிப்பை கூட வெளியிடவில்லை . மேலும் வீராப்பாக பேசிய சிகப்புத் துண்டு தோழர்கள் நேற்றும் அதே வீராப்புடன் காணப்பட்டனர் ஆனால் அதை அ.தி.மு.கவிடம் காட்டவில்லை , பெட்டிபாம்பை போல் அவர்களிடம் சென்று தொகுதிப்பங்கீட்டை முடித்துவிட்டு வெளியே வரும்வேளையில் மூன்றாவதணியை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம்தான் அந்த வீராப்பை காட்டினார்கள் . அதாவது அவர்களுக்கு தொகுதிகள் கிடைப்பது கூட முக்கியமில்லையாம் அவர்களுக்கு மானம் , ரோஷம் இருப்பது போன்ற பொய் பிரச்சாரங்களை தவிர்ப்பதுதான் முக்கியமாம் . நானும் கூட என் வலைதளத்தின் மூலமாக அவ்வகையான பொய் பிரச்சாரங்களுக்கு என்னுடைய கண்டனத்தை சொல்ல விரும்புகிறேன் . தே.மு.தி.கவின் தொகுதிகள் எதுவென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை . மேலும் ராஜபக்சேவால்தான் கூட்டணியில் இருந்து விலக்கினார்கள் என்று ஆவேசமாக பேசிய ம.தி.மு.கவினர் தேர்தல் ஆணையத்திடமிருந்து கட்சியையும் சின்னத்தையும் காத்துக்கொள்ள ராஜபக்சேவின் கட்சியிடம் கூட கூட்டணிக்குச் செல்லத்தயார் என்று ஒரு அந்தர் பல்டியை அடிதிருப்பதாகத்தான் தெரிகிறது இதுதான் பெப்சி விளம்பரத்தில் பீட்டர்சன் சொல்லும் பல்டி ஹிட்டோ ???
Thursday, March 17, 2011
ராஜபக்சேவால் அடிவாங்கிய சொம்பு ...
பெற்ற தாயே குழந்தைக்கு விஷம் குடுப்பது போல் செய்து விட்டதாகவும் , ராஜபக்சேவின் பேச்சை கேட்டுதான் தங்களை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாகவும் , மேலும் ம.தி.மு.க ஒரு வெண்கல பானை அது கீழே விழுந்தாலும் உடையாது சத்தம் மட்டும்தான் ஏற்படுத்தும் என்றும் ம.தி.மு.கவின் கொ.ப .செ நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஜெவிற்கு தாய் பாசத்தை பற்றி ஒன்றும் தெரியாது என்று தெரியாது போலும் மேலும் வெண்கல பானை என்பதால் தான் அடிக்கடி அடகு வைத்து விடுகிறார்களா என்றெல்லாம் மக்கள் கேலிக்கு ஆளாகியிருக்கிறது ம.தி.மு.க .
இன்று தமிழக அரசியலில் முக்கியமான நாள் ஆகுமா ???
அ.தி.மு.கவின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அதிர்ந்து போன கூட்டணி கட்சிகள் நேற்று அவசர் கூட்டம் நடத்தினர் . கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் , புதிய தமிழகம் கட்சித்தலைவர் , தமிழகத்தில் மேலும் பல கட்சிகள் இருக்கிறது என்றே நேற்றுதான் தெரிய நேரிட்டது அத்தனை பேரும் தே.மு.தி.க கட்சித்தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து மூன்றாவது அணி குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . ஆனால் விஜயகாந்த் இன்னும் காத்திருப்பதாகத்தான் தெரிகிறது . அது அ.தி.மு.கவிற்கா இல்லை ம.தி.மு.விற்கா என்பது குறித்தும் முடிவெடுத்தாக தெரியவில்லை . இதுகுறித்து இன்று கூறுவதாக தெரிவித்துள்ளார் . ஆனால் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறுவதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது . தமிழக அரசியலின் முக்கிய கூத்துகள் இன்று அரங்கேறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் .
Subscribe to:
Posts (Atom)
