Tuesday, March 22, 2011
இன்று முதல் காலிறுதி போட்டிகள் .
இன்று முதல் உலக கோப்பை காலிறுதி போட்டிகள் துவங்குகிறது . இன்று நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் பாக்கிஸ்தான் அணியை மேற்கிந்திய தீவுகள் எதிர்கொள்கிறது .
இன்று முதல் பிரச்சாரம் ஆரம்பம் .
திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவரது பிரச்சாரத்தை துவங்குகிறார் . இக்கூட்டத்தில் தி.மு.க அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் பங்கேற்கின்றனர் . மேலும் அண்மையில் அறிவித்தபடி நடிகர் வடிவேலுவும் இந்த கூட்டத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் .
Friday, March 18, 2011
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் நேற்றைய முடிவுகளும் .
நேற்றைய முடிவுகள் :
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நேதேர்லாண்டை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது அயர்லாந்து... இலங்கையில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை 112 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .
இன்றைய போட்டி :
இன்று நடைபெறும் பி பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை தென்னாப்பரிக்க அணி எதிர்கொள்கிறது . இப்போட்டியில் வங்கதேசம் வென்றால் அது அப்பிரிவில் அழ குழபங்களை ஏற்படுத்தும் .
ஏ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பாக்கிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி .

புஸ்.. புஸ் ... என்று சீரிய ஊசிவெடிகள் ...
தமிழக அரசியலையே மாற்றக்கூடிய நாளாக கருதப்பட்டது நேற்றைய தினம் . ஆனால் அது ஏற்கனவே அமைந்த தேர்தல் கூட்டணியை கூட மாற்றவில்ல என்பதுதான் நகைப்புக்குரியது . நேற்று மூன்றாவதணியை பற்றி அறிவிப்பதாக கூறிய விஜயகாந்த் அவர் கட்சி அலுவகத்திற்கு வருவது குறித்தான அறிவிப்பை கூட வெளியிடவில்லை . மேலும் வீராப்பாக பேசிய சிகப்புத் துண்டு தோழர்கள் நேற்றும் அதே வீராப்புடன் காணப்பட்டனர் ஆனால் அதை அ.தி.மு.கவிடம் காட்டவில்லை , பெட்டிபாம்பை போல் அவர்களிடம் சென்று தொகுதிப்பங்கீட்டை முடித்துவிட்டு வெளியே வரும்வேளையில் மூன்றாவதணியை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம்தான் அந்த வீராப்பை காட்டினார்கள் . அதாவது அவர்களுக்கு தொகுதிகள் கிடைப்பது கூட முக்கியமில்லையாம் அவர்களுக்கு மானம் , ரோஷம் இருப்பது போன்ற பொய் பிரச்சாரங்களை தவிர்ப்பதுதான் முக்கியமாம் . நானும் கூட என் வலைதளத்தின் மூலமாக அவ்வகையான பொய் பிரச்சாரங்களுக்கு என்னுடைய கண்டனத்தை சொல்ல விரும்புகிறேன் . தே.மு.தி.கவின் தொகுதிகள் எதுவென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை . மேலும் ராஜபக்சேவால்தான் கூட்டணியில் இருந்து விலக்கினார்கள் என்று ஆவேசமாக பேசிய ம.தி.மு.கவினர் தேர்தல் ஆணையத்திடமிருந்து கட்சியையும் சின்னத்தையும் காத்துக்கொள்ள ராஜபக்சேவின் கட்சியிடம் கூட கூட்டணிக்குச் செல்லத்தயார் என்று ஒரு அந்தர் பல்டியை அடிதிருப்பதாகத்தான் தெரிகிறது இதுதான் பெப்சி விளம்பரத்தில் பீட்டர்சன் சொல்லும் பல்டி ஹிட்டோ ???
Thursday, March 17, 2011
ராஜபக்சேவால் அடிவாங்கிய சொம்பு ...
பெற்ற தாயே குழந்தைக்கு விஷம் குடுப்பது போல் செய்து விட்டதாகவும் , ராஜபக்சேவின் பேச்சை கேட்டுதான் தங்களை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாகவும் , மேலும் ம.தி.மு.க ஒரு வெண்கல பானை அது கீழே விழுந்தாலும் உடையாது சத்தம் மட்டும்தான் ஏற்படுத்தும் என்றும் ம.தி.மு.கவின் கொ.ப .செ நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஜெவிற்கு தாய் பாசத்தை பற்றி ஒன்றும் தெரியாது என்று தெரியாது போலும் மேலும் வெண்கல பானை என்பதால் தான் அடிக்கடி அடகு வைத்து விடுகிறார்களா என்றெல்லாம் மக்கள் கேலிக்கு ஆளாகியிருக்கிறது ம.தி.மு.க .
இன்று தமிழக அரசியலில் முக்கியமான நாள் ஆகுமா ???
அ.தி.மு.கவின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அதிர்ந்து போன கூட்டணி கட்சிகள் நேற்று அவசர் கூட்டம் நடத்தினர் . கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் , புதிய தமிழகம் கட்சித்தலைவர் , தமிழகத்தில் மேலும் பல கட்சிகள் இருக்கிறது என்றே நேற்றுதான் தெரிய நேரிட்டது அத்தனை பேரும் தே.மு.தி.க கட்சித்தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து மூன்றாவது அணி குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . ஆனால் விஜயகாந்த் இன்னும் காத்திருப்பதாகத்தான் தெரிகிறது . அது அ.தி.மு.கவிற்கா இல்லை ம.தி.மு.விற்கா என்பது குறித்தும் முடிவெடுத்தாக தெரியவில்லை . இதுகுறித்து இன்று கூறுவதாக தெரிவித்துள்ளார் . ஆனால் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறுவதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது . தமிழக அரசியலின் முக்கிய கூத்துகள் இன்று அரங்கேறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் .
Wednesday, March 16, 2011
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் நேற்றைய முடிவுகளும் .
நேற்றைய முடிவுகள் :
நேற்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் கனடாவை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது .
இன்றைய போட்டி :
இன்று பி பிரிவில் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் மேற்கிந்தியத்தீவுகள் - இங்கிலாந்து அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரிட்சையில் ஈடுபடுகிறது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால் உலக கோப்பையை விட்டு வெளியேறிவிடும் , இந்திய அணிக்கும் காலிறுதி இடம் உறுதி செய்யப்பட்டுவிடும் .

நேற்றைய முக்கிய கூத்து .
சாதிக் பாட்சா மற்றும் அ.தி.மு.க விடம் சாதிக்க முடியாத பாச்சாக்கள்தான் நேற்றைய முக்கிய கூத்தாக கருதப்படுகிறது .
தமிழகத்தில் மூன்றாவது அணியா ???
நேற்று மாலை தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அ.தி.மு.க வுடனான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடக்க மறுபக்கம் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது இதில் ம.தி.மு.கவிற்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க பலம் வாய்ந்ததா என்று கணித்ததோ இல்லையோ ஆனால் அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளால் கேட்கப்பட்ட தொகுதிகளாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கட்சித் தலைமை தீர்மானமாக இருந்ததாக தெரிகிறது . இதனால் அதிர்ச்சி அடைந்த தோழமை கட்சிகள் அவரவர் கேட்ட தொகுதிகளை வழங்காவிட்டால் மூன்றாவது அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது . இது குறித்து அ.தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இன்று அவசர கூட்டம் போட்டுள்ளது . ம.தி.மு.க 19 ஆம் தேதி அவசரக்கூட்டம் போட்டுள்ளது . அது ஏப்ரல் 19 ஆகா இல்லாமல் மார்ச் 19 ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சாதிக் பாட்சா தற்கொலை.
2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு பிரச்சனையில் குற்றம்சாடப்பட்டவரும் , ஆங்கில ஊடகங்களால் குற்றவாளி என்றே கூறப்பட்ட சாதிக் பாட்சா நேற்று அவரது தேனாம்பேட்டை இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ராஜா மற்றும் அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்றும் ஊடகங்கள் தன்னை குற்றவாளியாக சித்தரித்தது என்றும் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆங்கில ஊடகங்களின் தன்னிச்சையான அடாவடிதனத்திர்க்கு பலி எண்ணிக்கையில் ஒன்று கூடி உள்ளது என்றே கூறவேண்டும் ஆனால் இதை வைத்தும் தங்களது TRP ரேட்டிங்கை எப்படி உயர்த்துவது என்று பார்க்கிறது இரக்கமற்ற ஆங்கில ஊடகங்கள் ....

Tuesday, March 15, 2011
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் நேற்றைய முடிவுகளும் .
நேற்றைய முடிவுகள் :
நேற்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்ரிக்கா அயர்லாந்தை 131 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இன்றைய போட்டி :
இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா கனடாவை எதிர்கொள்கிறது.
இப்போட்டி பெங்களூரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது .

Monday, March 14, 2011
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் நேற்றைய முடிவுகளும் .
நேற்றைய முடிவுகள் :
நேற்று நடைபெற்ற வங்கதேசம் நெதெர்லாந்து போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது .
இதன் காரணமாக இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் மோதும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து
தள்ளப்பட்டுள்ளது .
ஏ பிரிவில் நடைபெற்ற பாகிஸ்தான் ஜிம்பாவே இடையேயான போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று காலிறுதி இடத்தை மேலும் உறுதி செய்து கொண்டுள்ளது .
இன்றைய போட்டி :
இன்று பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அயர்லாந்தை எதிர்கொள்கிறது . இப்போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது .

ஒரு வழியாக அ.தி.மு.க தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் .
கடைசி வரைக்கும் காங்கிரஸ் வரும் ஆனா வராது என்று எதிர்பார்த்த
அ.தி.மு.க . காங்கிரஸ் - தி.மு.க தொகுதி பங்கீடு முடிந்த மறுநாளே கம்யூனிஸ்ட்களின் தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 12
இந்திய கம்யூனிஸ்ட் - 10
18 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி குறைத்து கொடுத்தாலும் முடியாது என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 12 தொகுதிகளுக்கு அடி பணிந்தது . இந்திய கம்யூனிஸ்ட்யை விட 2 தொகுதிகள் அதிகம் என்ற பெருமையில் மறந்திருப்பார்கள் போலும் . இனி மிச்சம் இருக்கும் தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளை சகோதரியிடமிருந்து பேரின்பத்துடன் வாங்கிச்செல்லும் வை.கோவின் கூத்துதான் பாக்கி.

Sunday, March 13, 2011
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்.
தற்போது நடந்து வரும் போட்டியில் வங்கதேச அணி நேதேர்லாண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இது வங்கதேச அணியை பொறுத்த வரை மிக முக்கிய போட்டி ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி அவர்களின் காலிறுதி கனவை பிரகாசிக்கும்.
இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது . இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக இலங்கை பல்லேகேலே மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது . இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக இலங்கை பல்லேகேலே மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்றைய முக்கிய கூத்து .
தி.மு.க காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு முடிவடைந்தது என்று தங்கபாலு தெரிவித்துள்ளார் . இனி அடுத்த கூத்து சத்யமூர்த்திபவனில் அரங்கேறும் என்று எதிர்பாக்கப்படுகிறது .
முன்னுரை
அன்றாடம் தமிழகத்தில் நடக்கும் கூத்துக்கள் அது அரசியல் மேடை ஆகட்டும் அல்ல சினிமா மேடை ஆகட்டும் அதை அலசும் ஒரு சிறியவனின் கருத்துகள் ...
Subscribe to:
Posts (Atom)